மாநில செய்திகள்

வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் + "||" + Chance of light to moderate rain in North Tamil Nadu Weather Center Info

வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

24.02.2021 முதல் 26.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக வெப்பநிலை 31 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் வாசிக்கப்பட்டவை