தேசிய செய்திகள்

முந்தைய ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை - பிரதமர் மோடி குற்றாச்சாட்டு + "||" + former govts gave it 'sautela' treatment by overlooking development in various sectors: PM Modi during various projects' launch in Silapathar, Dhemaji

முந்தைய ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை - பிரதமர் மோடி குற்றாச்சாட்டு

முந்தைய ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை - பிரதமர் மோடி குற்றாச்சாட்டு
அசாமில் முந்தைய ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்று மோடி குற்றாச்சாட்டினார்.
கவுகாத்தி,

பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்  இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அதனை தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசியதாவது:-

மத்திய அரசு மற்றும் அசாம் அரசு உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. மாநிலத்திற்கு அதிக ஆற்றல் இருந்தபோதிலும், இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை.

அசாமின் தேநீர், சுற்றுலா, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மாநிலத்தின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும். போகிபீல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திராவில் உள்ள கலியபொமோரா பாலம் அசாமின் இணைப்பை மேம்படுத்தும். நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அசாம் அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக, மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உருவாகி உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் மாநிலமும் இணைந்து செயல்படுகிறது. 

தேயிலை தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் பிராந்திய மொழியில் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.