தேசிய செய்திகள்

மோடி அரசு தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம் + "||" + Modi government filling pockets of its friends: Congress leader Rahul Gandhi on rising petrol, diesel prices

மோடி அரசு தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசு தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்
தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது என பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. 

டீசல் விலையும் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு உடனடியாக விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  நேற்று  பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதியிருந்தார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பெட்ரோல் நிலையங்களில் உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, அங்குள்ள மீட்டர் வேகமாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரவில்லை. வீழ்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஆக இங்கு அதிகரித்துள்ளது. சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது” எனக்கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ” நிச்சயமாக அது தவறானது” : நெருக்கடி நிலை குறித்து ராகுல் காந்தி கருத்து
பேராசிரியர் கௌசிக் பாசுவுடன் ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடினார்.
2. பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்!
பிரதமர் மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டி உள்ளார்.
3. மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி
மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார்.
5. வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும்; பிரதமர் மோடி உறுதி
4 முக்கிய துறைகளை தவிர, மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.