தேசிய செய்திகள்

அரியானாவில் 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24 ஆம் தேதி முதல் திறப்பு + "||" + Haryana: Classes for standard 3-5 students to resume from 24 Feb

அரியானாவில் 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24 ஆம் தேதி முதல் திறப்பு

அரியானாவில்  3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24 ஆம் தேதி முதல் திறப்பு
அரியானாவில் வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் வகுப்பு முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கேரளா, மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது.  நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 74 சதவீதம் மேற்கூறிய மாநிலங்களில் ஏற்படுவபவைதான். எனினும் பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது. 

இந்த நிலையில், அரியானாவில் வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் வகுப்பு முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு துவக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது சரிந்து விழுந்த மேடை
அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று
அரியானாவில் இன்று 118- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
4. பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு: கோவையில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை
கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.