உலக செய்திகள்

காங்கோவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல்: இத்தாலி தூதர் பலி + "||" + Italy’s envoy to DR Congo killed in attack on UN convoy

காங்கோவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல்: இத்தாலி தூதர் பலி

காங்கோவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல்:  இத்தாலி தூதர் பலி
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் நடந்த தாக்குதலில் இத்தாலி தூதர் பலியான சம்பவம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் நடந்த தாக்குதலில்  இத்தாலி தூதர்  பலியான சம்பவம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டின் வடக்கு கிவுவில் உள்ள  கோமா நகரின் நைராகோன்கோ  பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

ஐ.நா-வின் உலக உணவு திட்டத்திற்கான வாகனத்தில் காங்கோவிற்கான இத்தாலி தூதர் லுகா அட்டன்சியோ உடன் இராணுவத்தினர் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென ஆயுதமேந்திய மர்ம நபர்கள் காரை நோக்கி சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் இத்தாலி இராணுவ வீரருடன் லுகா அட்டன்சியோ  கொல்லப்பட்டதாக இத்தாலி வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் பலர் காயமடைந்ததாக காங்கோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஐ.நா அதிகாரிகளை கடத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. காங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை கொளுத்திய பொதுமக்கள்
காங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை அங்குள்ள மக்கள் தீயிட்டு கொளுத்தினர்.
2. காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து- 60 பேர் பலி, பலர் மாயம்
காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60 பயணிகள் பலியாகியுள்ளனர்.
3. காங்கோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்; 46 பேர் உயிரிழந்ததாக தகவல்
காங்கோ நாட்டில் பயங்கரவாதிகல் நடத்திய தாக்குதலில் 46 பொது மக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி
காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.
5. காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்
காங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.