மாநில செய்திகள்

மின்வாரியத்தில் 5000 கேங்மேன்களை நியமிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் + "||" + 5000 gangmen can be appointed in the power plant - High Court

மின்வாரியத்தில் 5000 கேங்மேன்களை நியமிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்

மின்வாரியத்தில் 5000 கேங்மேன்களை நியமிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம்
மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது.
சென்னை,

களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு  ஒன்றை தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதியதாக கேங்மேன் நிரப்ப வேண்டும். மேலும் 2019-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் தெரிவித்தனர்.

அனைத்து விதிகளையும் பின்பற்றபட்டதாகவும், உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட 70% பணிகள் முடிந்துள்ளதாகவும், புதியதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி என தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவி ஏற்பு: கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
2. கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம்; சென்னை ஐகோர்ட்டில் யூஜிசி பதில் மனு தாக்கல்
கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என சென்னை ஐகோர்ட்டில் யூஜிசி பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
3. தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? நீதிபதிகள் கேள்வி
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
4. சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்
சென்னை ஐகோர்ட்டில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் ஒப்புதல் அளித்து உள்ளது.
5. கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்
கோவில்களின் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை