மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + Tamil Nadu CM lays foundation stone for Sri Venkateswara Swamy Temple

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலுக்கு முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம்:

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஏழுமலையான் கோவில் (ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில்) கட்டப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

பூமி பூஜையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். மேலும், திருக்கோவில் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
 
பக்தர்களின் வசதிக்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.

விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அமைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.