தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது + "||" + Maharashtra's COVID-19 Tally Below 6,000 After 3 Days

மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
மராட்டியத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,210- ஆக உள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதேபோல தலைநகர் மும்பையிலும் தொற்று பாதிப்பு அசுர வேகத்தில் அதிக ரித்து வருகிறது.  

கொரோனா  பரவல் அதிகரித்ததால், புனே, அமராவதி, நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.  மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மராட்டிய அரசு எச்சரித்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக  உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது மாநில மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக 5,210- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 51,806- ஆக உயர்ந்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,035- ஆகும். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 99 ஆயிரத்து 982- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா எல்லைகளை மூடிய விவகாரம்: மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் - பினராயி விஜயன்
கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
2. கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. கேரளாவில் மேலும் 4,070- பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் மேலும் 4,070- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.