உலக செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம் + "||" + Chinese President Xi Jinping may visit India for BRICS summit

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்  இந்தியா வருகை தரலாம்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீஜிங்

சீனா அதிபர்  ஜி ஜின்பிங் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரிக்ஸ்  நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மாநாட்டில் கலந்து   கொள்ள இந்தியா  வருகை தரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டத்தை நடத்துவதற்கு இந்தியாவுக்கு சீனா தனது “ஆதரவை” தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பு எல்லை நெருக்கடியால் பாதிக்கப்படாது என்று கூறி  உள்ளது. 

“இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் நாங்கள் இந்தியாவை ஆதரிக்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங்  வென்பின் கூறி உள்ளார்.

மேலும் பொருளாதார ஒத்துழைப்பு, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களிடமிருந்து மக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், தகவல் தொடர்பு மற்றும் உரையாடலை வலுப்படுத்தவும்,  ஒத்துழைப்பை பலப்படுத்தவும் நாங்கள் இந்தியா மற்றும் பிற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவோம் என கூறினார்.

பிரிக்ஸ் சந்திப்புக்கு முன்னர் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பிற முக்கிய உச்சிமாநாடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

தொற்று நோய் பரவலுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் வங்காள தேசத்திற்கு  தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள்ள இருக்கிறார்.  மேலும் மே மாதம் போர்ச்சுகலில் நடைபெறும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திலும், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அங்கு இந்தியா விருந்தினர் நாடாக அழைக்கப்பட்டுள்ளது. 

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான தேதி குறித்த ஆரம்ப விவாதங்கள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லாவின் சமீபத்திய மாஸ்கோ பயணத்தின் போது நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புகுந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு: இன்னமும் புரியாத புதிர்தான் ‘கொரோனா’
புத்தாண்டை கொண்டாட உலகமே தயாராகிக்கொண்டிருந்த வேளை அது. 2004-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கடல் கொந்தளிப்புடன் எழுந்து வந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதியை துவம்சம் செய்தது. ஏராளமான உயிர்களை சுருட்டிச் சென்றது. நாடே சோகத்தில் மூழ்கியது. நம்மைப்போன்று வேறு சில நாடுகளும் பேரழிவை சந்தித்தன.
2. சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத்
சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
3. சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் - அமெரிக்கா
சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
4. இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
5. ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி
உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்துள்ளன.