தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது + "||" + Rajya Sabha bypolls: BJP wins both seats from Gujarat, 1 of ..

மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது

மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
அகமதாபாத்,

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலும், பாஜக எம்.பி. அபய் பரத்வாஜும் அண்மையில் மரணமடைந்தனர். அகமது படேலுக்கு 2023-ம் ஆண்டு வரையிலும், பரத்வாஜுக்கு 2026 வரையிலும் பதவிக்காலம் இருந்தது. அதற்கு முன்பே அவர்கள் மரணமடைந்ததால் அந்த இரு இடங்கள் காலியாகின. 

காலியான 2 இடங்களுக்க்கும்  மார்ச் 1 ஆம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  பாஜக சார்பில் இரண்டு இடங்களுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தரப்பில் யாரும் நிறுத்தப்படவில்லை. இதனால், இரு இடங்களையும் பாஜக போட்டியின்றி கைப்பற்றியது. இதன்படி,  தினேஷ் அனவாடியாவும், ராம்பாய் மொக்ரியாவும் மாநிலங்களவை எம்.பியாக தேர்வாகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் இன்று பா.ஜ.க. பிரசார கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் இது என்பதால் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. 20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது- திருமாவளவன்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
3. 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது.
4. அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் ?
அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை என்பன குறித்த பட்டியல்கள் வெளியாகியுள்ளது.
5. புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பாஜக இடையே நீடிக்கும் இழுபறி!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.