மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல் + "||" + So far 3 lakh 85 thousand people in Tamil Nadu have been vaccinated against corona - Health Department information

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், தமிழகத்தில் 34-வது நாளாக நேற்று 687 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 754 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 366 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 706 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 7 ஆயிரத்து 660 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது - மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் இன்னும் 2 மாதங்களில் ஏற்படப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.