தேசிய செய்திகள்

அரியானாவில் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் + "||" + Classes 3 to 5 in Haryana start tomorrow

அரியானாவில் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடக்கம்

அரியானாவில் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடக்கம்
அரியானாவில் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 24ந்தேதி முதல் தொடங்க உள்ளன.
சண்டிகர்,

அரியானாவில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தளர்வுகள் பற்றிய அறிவிப்பும் வெளிவந்தன.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 24ந்தேதி முதல் தொடங்க உள்ளன என அரசு அறிவித்து உள்ளது.  இதுபற்றி அரியானா அரசின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செயல்படும்.

கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த முடிவானது அமல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

அரியானாவில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் முன்பே தொடங்கப்பட்டு விட்டன.  இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் ஒன்றை கொண்டு வர வேண்டும்.

இதேபோன்று, தங்களுடைய பிள்ளைகள் ஆன்லைன் படிப்புகளை தொடர வேண்டும் என விரும்பும் பெற்றோர் அதுபற்றி பள்ளிகளுக்கு அவர்கள் கடிதம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 9, 11-ம் வகுப்புகள்-கல்லூரிகள் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் நேற்று தொடங்கப்பட்டது. மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
2. ஊரடங்கில் சிறப்பு ரெயிலில் பயணித்த 97 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு; மத்திய மந்திரி தகவல்
கொரோனா வைரசை தொடர்ந்து பிறப்பித்த ஊரடங்கின்போது சிறப்பு ரெயிலில் பயணம் செய்த புலம்பெயர்ந்தோரில் 97 பேர் உயிரிழந்து உள்ளனர் என மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.