தேசிய செய்திகள்

11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின + "||" + Train Services Resume In Kashmir Valley After 11 Months

11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின

11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின
11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
புதுடெல்லி, 

கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில், 11 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன.

காஷ்மீரின் ரயில் சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ரெயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீ்ண்டும் ரெயில் சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்க கூடியதாகும். கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரெயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரெயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே 65 சதவீத ரெயில்சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் 250 ரெயில்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன. இனி மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு ரெயில்களாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து ரெயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.