தேசிய செய்திகள்

மராட்டிய பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு + "||" + Mandatory body temperature testing for Maratha travelers; Madhya Pradesh Government Notice

மராட்டிய பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

மராட்டிய பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என மத்திய பிரதேச அரசு அறிவித்து உள்ளது.
புனே,

மராட்டியத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்று கிழமை 6,971 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இந்த எண்ணிக்கை உயர்வால், அதனை ஒட்டிய மத்திய பிரதேசத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மராட்டியத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம் என மத்திய பிரதேச அரசு அறிவித்து உள்ளது.  இதுபற்றி உள்துறை வெளியிட்ட உத்தரவில், போபால், இந்தூர், சிந்த்வாரா உள்ளிட்ட மராட்டிய எல்லையையொட்டிய மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா மேலாண் கூட்டங்களை நடத்தும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு வரவிருக்கிற காலங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக அதிக அளவில் பக்தர்கள் திரள கூடும்.  இதனை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு
காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு.
2. தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்: கோவில்பட்டியில் ராதிகா போட்டி சரத்குமார் அறிவிப்பு
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்தார்.
3. டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு உரிமையாளர்கள் அறிவிப்பு
டீசல் விலை உயர்வு எதிரொலியாக லாரிகளின் வாடகை கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
4. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுவிப்பு; கவர்னர் அறிவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட அனைத்து 317 மாணவிகளும் பாதுகாப்புடன் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
5. சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.