உலக செய்திகள்

மெக்சிகோ விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி + "||" + At least 6 killed in plane crash in eastern Mexico

மெக்சிகோ விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

மெக்சிகோ விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி
மெக்சிகோவின் வெராக்ரூசில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டின் வடக்குப் பகுதியில் மோரோலெஸ் மாகாணத்திலுள்ள எல் லென்சரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக ராணுவ விமானம் கிழக்கு மாகாணம் வெராகுரூசில் உள்ள விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (செடெனா) தெரிவித்துள்ளது. 

விமான விபத்து குறித்து விசாரணை, வான்வழி ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் நிகழ்வின் சாத்தியமான காரணங்களை அறிவதற்காக, அதனுடன் தொடர்புடைய நிபுணர் குழு அறிக்கைகளை சமர்பிக்கும் என்று செடேனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,370 பேருக்கு கொரோனா
மெக்சிகோவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,25,915 ஆக அதிகரித்துள்ளது.
2. மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
மெக்சிகோவில் கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
3. மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்வு
மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,851-ஆக உள்ளது.