தேசிய செய்திகள்

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை + "||" + Hearing in defamation case against Rahul Gandhi on May 15

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
தானே,  

கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இருந்தது" என குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு எதிராக பிவண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் குந்தே அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில், "ராகுல் காந்தி எந்த தவறும் செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ராகுல் காந்தியின் வக்கீல் நாராயண் அய்யர் வாதிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், ராகுல்காந்தி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார். மனுதாரர் ராஜேஷ் குந்தேயின் வக்கீல் பி.பி.ஜெய்வந்த், சில ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் மே 15-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு பாலிவால் ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மனுதாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
2. நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது - பாஜக மீது ராகுல்காந்தி விமர்சனம்
நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. ராகுல் காந்தி திருமணமாகாதவர், ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார் - முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ‘அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது என ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
5. மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள்: ‘மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்’ சென்னை பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள் கிடப்பதாகவும், இதை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.