மாநில செய்திகள்

ஓடிடியை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ + "||" + Controlling ODT is not in the hands of the government - Minister Kadampur Raju

ஓடிடியை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓடிடியை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஓடிடியை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாச்சியார்பட்டி மற்றும் வில்லிச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:-

5 ஆண்டுகளில் சுமார் 50 ஆண்டுகால சாதனைகளை செய்த மன நிறைவு உள்ளது. இன்றைய சூழ்நிலை ஓடிடியை தவிர்க்க முடியாது. ஓடிடியை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை.

நாட்டில் நிம்மதி இல்லாமல் வாழும் ஒரே நபர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மட்டுமே. முதல்வராக முடியவில்லை என்ற கவலை ஸ்டாலினுக்கு உள்ளது. ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற கவலை அவருக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.