மாநில செய்திகள்

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை + "||" + Tenkasi Courtallam Main Falls flooded for the 2nd day - Tourists are not allowed to bathe

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,

கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 20-ந் தேதி பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், நேற்று காலை மெயின் அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தன. மதியத்திற்கு பிறகு நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் தடுப்பு கம்பிகள் உடைந்து பெண்கள் குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் யாரையும் போலீசார் குளிக்க அனுமதிக்கவில்லை. தடுப்பு கம்பிகள் சரிசெய்யப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஆவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2. குற்றாலம் மெயின் அருவியில் 2 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் 2 ஆவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.