மாநில செய்திகள்

மேற்குதொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of light rain in the hilly districts of the Western Ghats - Meteorological Center Information

மேற்குதொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்குதொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வடக்கு கேரளம் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (இன்று) லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்

22-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 12 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, தென்காசி மாவட்டம் சிவகிரி ஆகிய இடங்களில் 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், விழுப்புரம் மாவட்டம் வானூரில் 5 செமீ, புதுச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, காரைக்காலில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.