நாகலாந்து மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து,
பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. கடந்த 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை 9-ந் தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும் கோரிக்கை விடுத்து வருகினறனர்.
இந்தநிலையில் நாகலாந்து மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து நேற்று இரவு அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 29.80%-லிருந்து 25%-ஆகவும், டீசல் மீதான வரி 17.50%-லிருந்து 16.50%-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.22 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு 57 பைசா வரையிலும் குறையும் எனத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.