தேசிய செய்திகள்

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு + "||" + 6 killed in Karnataka quarry blast: Chief Minister Eduyurappa orders probe

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கல்குவாரியில் வெடித்தது சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமோகாவில் உள்ள கல்குவாரி ஒன்றில், கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,067 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று 19,067 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,160 ஆக அதிகரித்துள்ளது.
3. பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கை நீட்டிக்க கர்நாடக அரசு திட்டம்
கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,09,650 ஆக அதிகரித்துள்ளது.
5. கர்நாடகத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இன்று கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.