மாநில செய்திகள்

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு + "||" + DMK decides to boycott Tamil Nadu interim budget meeting

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். 

வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.