மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் + "||" + 34,181 crore allocation for school education - Deputy Chief Minister O. Panneerselvam

பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
சென்னை,

2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செலவம் வெளியிட்டுள்ளார். 

அதன் விவரம் பின்வருமாறு:-

* பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

*குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

* நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

* உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சுகாதாரத்துறைக்கு 19,420 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கைத்தறி துறைக்கு 1,224 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சிறப்புத் திட்டம்.

* காவல்துறையை நவீனமயப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு.

* மினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதியுதவி செய்துள்ளோம். கோவை மெட்ரோ ரயில் திட்டம்-சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும். மொத்த கடன் 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது.

தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.