உலக செய்திகள்

14 வயது சிறுமியை திருமணம் செய்த பாகிஸ்தான் எம்பி போலீசார் விசாரணை + "||" + Pakistan MP Maulana Salahuddin Ayubi marries 14-year-old girl from Balochistan; police launch probe

14 வயது சிறுமியை திருமணம் செய்த பாகிஸ்தான் எம்பி போலீசார் விசாரணை

14 வயது சிறுமியை திருமணம் செய்த பாகிஸ்தான் எம்பி போலீசார் விசாரணை
பாகிஸ்தான் எம்பி ஒருவர் தன்னை விட 4 மடங்கு வயது குறைந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்ரால்

பாகிஸ்தானில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான மவுலானா சலாஹுதின் அயூப் 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தானின் டான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தானில் 16 வயதுக்கும் குறைவான பெண்களை மணப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்து கிலா அப்துல்லாதொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் மவுலானா மவுலானா சலாஹுதின் அயூப் . இவர் ஜுகுர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளதாக கித்ரல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு புகார் அளித்துள்ளது.சித்ராலில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி பள்ளியில் பயின்று வருவதால், அவர் திருமணம் செய்துகொள்ளும் வயதை அடையவில்லை. எனவே, மவுலானாவின் திருமணம் செல்லாது என்று மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. 

பாகிஸ்தான் அப்சர்வர் கருத்துப்படி, எம்பி திருமணம் குறித்து அந்தப் பெண்ணுடன் தனித்துப் பேசியுள்ளார். முறையான திருமண விழா இன்னும் நடத்தப்படவில்லை.

’’மாணவி பள்ளியில் பிறந்த தேதி அக்டோபர் 28, 2006 என குறிப்பிடப்பட்டுள்ளது,இந்த நிலையில் எம்.பி. மவுலானாவின் திருமணம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் புகாரின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சித்ரால் வீட்டின் தரூஷ் பகுதியில் உள்ள சிறுமியை காவல்துறையினர் விசாரணை நடத்தினர், ஆனால் அவரது தந்தை தனது மகளின் திருமணத்தை மறுத்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

இக்குற்றச்சாட்டு குறித்து மவுலானாவின் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.