தேசிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் இந்தியா வருகை?வெளியுறவு அமைச்சகம் விளக்கம் + "||" + Xi may attend Brics summit in India Reports

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் இந்தியா வருகை?வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர்  இந்தியா வருகை?வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார் என்று வெளியான செய்திகள் தவறு என்று டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி

சீனா அதிபர்  ஜி ஜின்பிங் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரிக்ஸ்  நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மாநாட்டில் கலந்து   கொள்ள இந்தியா  வருகை தரலாம் என தகவல் வெளியானது. இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் நாங்கள் இந்தியாவை ஆதரிக்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங்  வென்பின் கூறினார். 

மேலும் பொருளாதார ஒத்துழைப்பு, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களிடமிருந்து மக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், தகவல் தொடர்பு மற்றும் உரையாடலை வலுப்படுத்தவும்,  ஒத்துழைப்பை பலப்படுத்தவும் நாங்கள் இந்தியா மற்றும் பிற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவோம் என கூறி இருந்தார். 

ஆனால் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி  ஜின்பிங் இந்தியா வருகிறார் என்று வெளியான செய்திகள் தவறு என்று டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பிரிக்ஸ் மாநாடு எப்போது நடக்கும் உள்ளிட்ட முடிவுகள் இன்னும் எடுக்கப்படாத நிலையில் சீன அதிபர் வருவதாக வெளியான செய்தி ஆச்சரியம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது.