கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று: 14- பேர் உயிரிழப்பு + "||" + 4,034 new COVID-19 cases in Kerala after 69K tests; One more case of UK variant virus found
கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று: 14- பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று 4,034- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும், தொற்று பரவல் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,034- ஆக உள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பை கண்டறிய 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனாவில் இருந்து இன்று 4,823- பேர் கேரளாவில் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 5.80 ஆக உள்ளது. கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 40- ஆயிரமாகவும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 81- ஆயிரமாகவும் உள்ளது.