பெங்களூரு அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு
பெங்களூரு அருகே சிக்கபல்லாபூரில் உள்ள ஒரு குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை சுகாதார அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான டாக்டர் கே.சுதாகர் பார்வையிட்டார். சிவமொகா மாவட்டத்தில் இருந்து இதேபோன்ற விபத்து நிகழ்ந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த துயரம் நடந்து உள்ளது. அமைச்சர் டாக்டர் சுதாகர் கூறும் போது குவாரி சட்டவிரோதமாகவு நடிபெற்ரதால் இந்த விபத்துக்கு வெடிப்பிற்கு வழிவகுத்ததாகவும், இது தொடரபாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பெங்களூரு அருகே சிக்கபல்லாபூரில் குவாரி ஒன்றில் 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சோகம் வெளிவந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் கடந்த மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த இடத்தை ஆய்வு செய்ததாக தெரிய வந்துள்ளது.
போலீசாருக்கு பயந்து வெடிபொருட்களை அவசரமாக மறைக்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ முயன்ற போது இந்த்வெடி விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும். நேற்று கூட, உள்ளூர் போலீசார் அந்த இடத்திலிருந்து ஒரு அமுக்கி வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த இடத்தில் வெடிபொருட்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என துணை ஆணையர் லதா தெரிவித்தார்.