தேசிய செய்திகள்

கபடி வீராங்கனை- தாயாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த கும்பல் + "||" + West Bengal: Kabaddi player, mom stripped and beaten in Bongaon

கபடி வீராங்கனை- தாயாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த கும்பல்

கபடி வீராங்கனை- தாயாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த  கும்பல்
மேற்கு வங்காள மாநிலம் போங்கோன் நகரில் ஒரு கும்பல் கபடி வீராங்கனை- தாயாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்தது.
கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போங்கோன் நகரை சேர்ந்த கபடி வீராங்கனை மற்றும் அவரது தாயாரை ஒரு கும்பல்  வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தியது. அவர்கள் தலைமுடியை வெட்டி வீசினர். அவர்களை நிர்வாணமாக்கினர். அவர்கள் வீடு சூறையாடப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியிதை அடுத்து  முக்கிய  குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய குற்றவாளி  ஷ்ரபந்தி மாலிக்  என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இராணுவத்தில் இருக்கும் தனது கணவருடன் கபடி வீராங்கனையின் தாயாருக்கு தொடர்பு இருப்பதாக  சந்தேகித்ததால், தாய்-மகள் இருவர் மீதும் ஷ்ரபந்தி மாலிக்  தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ ஆதாரங்கள் மற்றும் 20 வயது கபடி வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கபடி வீராங்கனை கூறும் போது

 அறையிலிருந்து என் அம்மாவின் அலறல் சத்தம் கேட்டபோது நான் பயிற்சிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். ஒரு கும்பல் எனது தாயாரை அடிப்பதைக் கண்டு நான்  தலையிட்டேன் ​​அவர்கள் என்னையும் தாக்கினர். நாங்கள் வெளியே இழுத்துவரப்பாட்டு ரோட்டில் வைத்து தாக்கப்பட்டோம்   எங்கள் தலைமுடி  வெட்டப்பட்டது. எங்கள் ஆடைகள் பறிக்கப்பட்டது. எங்களை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை என கூறினார்.

போங்கான் போலீஸ் அதிகாரி ஷேஷ் பிக்ரம் தஸ்திதர்,  ஷ்ரபந்தி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். நாங்கள் பிரதான குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை  தேடிவருகிறோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்துள்ளன.
2. மேற்கு வங்காளத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம்
மேற்கு வங்கத்தில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
3. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.க. மோதல்; பலர் காயம் - வாகனங்கள் சேதம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.கவினரிடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.
4. மேற்கு வங்காளத்தில் பயங்கர விபத்து; திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலி: பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
மேற்கு வங்காளத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
5. மே.வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை விபத்து: 13 பேர் பலி, 18- பேர் காயம்
மேற்கு வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 13- பேர் காயம் அடைந்தனர்.