தேசிய செய்திகள்

3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் + "||" + India detects two new variants N440K and E484Q of COVID-19: Health Ministry

3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக சரிவை சந்தித்தாலும் இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே. பால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், “ மராட்டியத்தில் என்440கே மற்றும் இ484கே என இரண்டு வகைகள் இருப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது.  மராட்டியம்,  கேரளம் மற்றும் தெலங்கானாவில் இந்த வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  எனினும், மராட்டியம் மற்றும் கேரளத்தின் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு இந்த வகைகள் கொரோனாதான்  காரணம்  என உறுதியாக கூற முடியாது”என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் : உத்தவ் தாக்கரே
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 452-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு: உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
4. கொரோனா மீட்பில் இந்தியா முதல் இடம்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.78- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.78 கோடியாக உயர்ந்துள்ளது.