தேசிய செய்திகள்

பாதுகாப்பு அமைச்சகம் இன்று ரூ.13,700 கோடி உள்நாட்டு இராணுவ ஆயுத கொள்முதலுக்கு அனுமதி + "||" + MoD clears defence buys worth ₹13,700 cr, including 118 Arjun Mk-1A tanks

பாதுகாப்பு அமைச்சகம் இன்று ரூ.13,700 கோடி உள்நாட்டு இராணுவ ஆயுத கொள்முதலுக்கு அனுமதி

பாதுகாப்பு அமைச்சகம் இன்று ரூ.13,700 கோடி உள்நாட்டு இராணுவ ஆயுத கொள்முதலுக்கு அனுமதி
பாதுகாப்பு அமைச்சகம் இன்று ரூ.13,700 கோடி மதிப்புள்ள உள்நாட்டு இராணுவ ஆயுத கொள்முதலுக்கு அனுமதி அளித்து உள்ளது.
புதுடெல்லி

பாதுகாப்பு அமைச்சகம் இன்று  ரூ.13,700 கோடி மதிப்புள்ள உள்நாட்டு இராணுவ  ஆயுத கொள்முதலுக்கு அனுமதி அளித்து உள்ளது. 

புதிய பீராங்கிகளுக்கு  ரூ.  8,380 கோடி செலவாகும், இராணுவத்தின் 3,000 க்கும் மேற்பட்ட ஏ.எஃப்.வி (டாங்கிகள் மற்றும் காலாட்படை போர் வாகனங்கள்) பாதுகாப்பு அமைப்புகளுக்கு, ரூ.5,300 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த ஆவடியில் தயாரிக்கப்படும் அர்ஜூனா பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆருத்ரா ரேடார்களை, இந்திய இராணுவத்திற்கு கொள்முதல் செய்ய, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள், 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலா 58 டன் எடையுள்ள, 118 அர்ஜூன் மார்க்1-ஏ பீரங்கிகளை, 30 மாதங்களுக்குள் தயாரித்து வழங்க, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றனர்.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிப்பான நாக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஆருத்ரா மத்திய ரக ரேடார் அமைப்புகளையும், இராணுவத்திற்கு கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.