உலக செய்திகள்

மாரடைப்பால் இறந்த பின்னரும் தூக்கிலிடப்பட்ட பெண் + "||" + Iran hangs woman despite heart attack death

மாரடைப்பால் இறந்த பின்னரும் தூக்கிலிடப்பட்ட பெண்

மாரடைப்பால் இறந்த பின்னரும்  தூக்கிலிடப்பட்ட பெண்
ஈரானில் மாரடைப்பால் இறந்த பின்னரும் ஒரு பெண் குற்றவாளி தூக்கிலிடப்பட்டார்.
லண்டன்

ஈரானில், மாரடைப்பால் இறந்த பின்னரும், ஒரு பெண் தூக்கில் போடப்பட்டுள்ளார். சஹ்ரா இஸ்மாயில் என்ற பெண், தனது கணவர், தன்னையும் தன் மகளையும் துஷ்பிரயோகம் செய்ததாகக்கூறி அவரைக் கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சஹ்ரா இஸ்மாயிலின் கணவர் ஒரு உளவுத்துறை அதிகாரி  ஆவார்.சஹ்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தூக்கில் போடப்படுவதற்காக தூக்கு மேடைக்கு சஹ்ரா  கொண்டுபோகப்பட்டபோது, அவருக்கு முன்னால் 16 குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதற்காக வரிசையில் நின்றிருக்கிறார்கள். அவர்கள் தூக்கில் போடப்படுவதை பார்க்க சஹ்ரா  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சஹ்ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆனால், ஈரானைப் பொருத்தவரை, ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்துவிட்டால், இறந்தவருக்காக பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, குற்றவாளி சட்டப்படி தூக்கில் போடப்படும்போது, தூக்கு கயிற்றில் தலை மாட்டப்பட்ட நிலையில் குற்றவாளி நிற்கும் நாற்காலியை பாதிக்கப்பட்டவரின் உறவினர் காலால் எட்டி உதைக்கவேண்டும். அவர்கள் அப்படி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி, நீதி கிடைத்ததாக பொருள். ஆனால், சஹ்ரா  இறந்துபோனதால், அவரது கணவரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காதே! ஆகவே, இறந்துபோனசஹ்ரா வின் உடலை தூக்கில் தொங்கவிட்டு, அவரது மாமியார் அவர் நிற்கவைக்கப்பட்டிருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்திருக்கிறார். ஒரு உயிரற்ற உடலுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது!!!

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ; 40 பேர் காயம்
ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் 40 பேர் காயம் அடைந்தனர்
2. அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுக்கு வெள்ளை மாளிகை கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா்.
3. ஈரான் இணங்கி நடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேரும்; புதிய வெளியுறவு மந்திரி அறிவிப்பு
ஈரான் 2015-ம் ஆண்டு, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடனும், ஐரோப்பிய கூட்டமைப்புடனும் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
4. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து அதிநவீன ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் ஈரான்
நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
5. ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி
இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஈரானில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.