தெலுங்கானாவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஐதராபாத்,
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் மாணவர்கள் ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.