தேசிய செய்திகள்

போதை பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு ; டாக்டர் மனைவி தற்கொலை + "||" + Woman Allegedly Takes Her Own Life, Leaves 18-Page Suicide Note Blaming Husband And In-Laws

போதை பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு ; டாக்டர் மனைவி தற்கொலை

போதை பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு ; டாக்டர் மனைவி தற்கொலை
போதைப்பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்து கொண்டதால் டாக்டர் மனைவி தற்கொலை செய்து கொண்டார்
அகமதாபாத்:

 குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஹிதேந்திர படேல் (47). இவரது மனைவி ஹர்ஷா (42). இவர்கள் கடந்த 2020 ஆகஸ்டில் திருமண தகவல் மையம் மூலம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த 9 ம் தேதி ஹிதேந்திராவின் வீட்டிற்கு வெளியே அவரது மனைவி ஹர்ஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருமணமான ஓராண்டுக்குள் ஹர்ஷா தற்கொலை செய்து கொண்டதால், வட்டாட்சியர்  விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது

இந்நிலையில், ஹிதேந்திராவின் வீட்டை சோதனை நடத்திய போலீசார், ஹர்ஷாவின் அறையில் அவர் கைப்பட எழுதியிருந்த 18 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தை போலீசார்  தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் ஹர்ஷா கூறி இருப்பதாவது:-

‘எனது கணவர் ஹிதேந்திராவுக்கும் எனக்கும் இடையிலான பாலியல் உறவு மிகவும் கொடூரமானது. அவர் ஒரு மருத்துவர் என்பதால், அவ்வப்போது எனக்கு  போதைப் பொருட்களைக் கொடுப்பார். நான் மயக்கமடைந்தவுடன், என்னை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொள்வார். அதற்காக பலமுறை என்னை மயக்கமடைய செய்துள்ளார்.

எனது மாமியாரும், எனது கணவரும் திருமணமான சிலநாட்களிலேயே என்னை துன்புறுத்தத் தொடங்கினர். எனது குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டு வாங்கி வர கட்டாயப்படுத்தினர். அவர்களது  விருப்பங்களை நிறைவேற்றாததால் என்னை அவமதித்தனர். என் கணவரின் பெற்றோர்  என்னை தவறாக நடத்தியது மட்டுமின்றி, அடித்து உதைத்து துன்புறுத்தினர்’ என்று அந்த கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து  டாக்டர் ஹிதேந்திரா, அவரது தந்தை மனு படேல் (71) மற்றும் தாய்   சுபத்ரா படேல் (69) ஆகியோரை தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹர்ஷாவின் தந்தை நானாஜி படேல் கூறுகையில், 

எனது மகள் ஹர்ஷா கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தனது கணவர் ஹிதேந்திராவுடன் சேர்ந்து வாழவில்லை. அவர் தனியாகவே வசித்து  வந்துள்ளார். அவ்வப்போது எனது வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்வார். கடந்த செவ்வாயன்று, அவரது கணவர் ஹிதேந்திராவின் வீட்டிற்குச் சென்றார். அங்கு எனது மகள் ஹர்ஷா விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டாள். முன்னதாக அவரது கணவர் ஹிதேந்திராவை  மருத்துவமனையில் சந்தித்த பின்னர் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்’ என்று தெரிவித்தார்.