மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல் + "||" + The number of people who have been vaccinated against corona in Tamil Nadu so far has crossed 4 lakh - Health Department information

தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் 35-வது நாளாக நேற்று 699 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 332 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 947 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 365 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4,00,698 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 623 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்ப மருந்தும், 8 ஆயிரத்து 75 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 562 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இதுவரை 7,62,604 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை 7,62,604 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
3. மார்ச் 5: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
4. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு: புதிதாக 543 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.