மாநில செய்திகள்

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாள் - தமிழக அரசு அறிவிப்பு + "||" + 27th working day for all government offices - Government of Tamil Nadu announcement

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாள் - தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாள் - தமிழக அரசு அறிவிப்பு
சட்டசபை இயங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27-ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது
சென்னை, 

பிப்ரவரி 27-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில், “ தமிழக சட்டசபையில் 27-ம் தேதி (சனிக்கிழமை) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளன. அன்று சட்டசபையின் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்ளுக்கும் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.