கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா அறிவிப்பு + "||" + Retirement from international cricket; Tharanga announces Sri Lanka opener

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா அறிவிப்பு
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டார்.
கொழும்பு,

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா.  சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2005ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக தரங்கா களமிறங்கினார்.

அவர் 292 போட்டிகளில் விளையாடி 9,112 ரன்களை எடுத்ததுடன், 18 சதங்களும் விளாசியுள்ளார்.  ஒரு நாள் போட்டி வரலாற்றில் இலங்கையின் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் தரங்கா 5வது இடத்தில் உள்ளார்.

15 ஆண்டு கால கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்டில் 31 போட்டிகளில் விளையாடி 1,754 ரன்களும், 26 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 407 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சளார்களில் ஒருவராக திகழ்ந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37), கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டார்.  இந்நிலையில், மற்றொரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு
காந்திய மக்கள் இயக்கம் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது தமிழருவி மணியன் அறிவிப்பு.
2. தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்: கோவில்பட்டியில் ராதிகா போட்டி சரத்குமார் அறிவிப்பு
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்தார்.
3. டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு உரிமையாளர்கள் அறிவிப்பு
டீசல் விலை உயர்வு எதிரொலியாக லாரிகளின் வாடகை கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
4. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுவிப்பு; கவர்னர் அறிவிப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட அனைத்து 317 மாணவிகளும் பாதுகாப்புடன் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
5. சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.