மாநில செய்திகள்

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு + "||" + Red Fort violence: Delhi court sends Deep Sidhu to 14-day judicial custody

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு

டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கு: நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி செங்கோட்டை முற்றுகை வழக்கில், நடிகர் தீப் சித்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டை மீது ஏறிய ஒரு கும்பல், அங்கு மத கொடிகளை ஏற்றியது. போலீசாரை தாக்கியது.

இதில், நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டி விட்டதாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததால், நேற்று அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் தீப் சித்துவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சமர்ஜீத் கவுர் உத்தரவிட்டார். முன்னதாக தீப் சித்து மீது வன்முறை, கொலைக்கு முயற்சி செய்தல், கிரிமினல் சதி உள்பட பல பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்
சொந்த குடும்பத்தினர் 7 பேரை கொன்ற வழக்கில் தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி மகன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதி வழக்கு முடித்து வைப்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
3. நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது ஐகோர்ட்டு கருத்து
ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக இருப்பதாக கருதக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4. பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளருக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி தொடர்ந்த பாலியல் அவதூறு வழக்கை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார்.
5. அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு - மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணை, மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.