அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு + "||" + BSP chief Mayawati attacks government over rising fuel, LPG prices
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் தொடர்பாக மத்திய அரசை மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
லக்னோ,
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக பாஜக அரசை, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மாயாவதி நேற்று இந்தியில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘மக்கள் ஏற்கனவே கொரோனா, வேலையில்லாமை, பணவீக்கத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், தொடர்ச்சியாக, தேவையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது. பொதுநல பணிகளுக்கான நிதியை அதிகரிப்பதற்காகவே வரியைக் கூட்டுவதாக அரசு கூறும் காரணம் நியாயமில்லாதது’ என்று தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘பெட்ரோல், டீசல் மீதான வரியை தொடர்ந்தும், தன்னிச்சையாகவும் அதிகரிப்பதன் மூலம் பொதுமக்கள் மீது சுமையேற்றுவதை உடனடியாக நிறுத்துவது முக்கியம். அதுவே, கோடிக்கணக்கான ஏழைகள், உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசின் பெரிய நலப்பணியாகவும், நன்மையாகவும் இருக்கும்’ என்றும் தெரிவித்திருந்தார்.