தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு - மாணவர்கள் அதிருப்தி + "||" + NEET Exam Fee Rise for Medical Postgraduate - Students Dissatisfied

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு - மாணவர்கள் அதிருப்தி

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு - மாணவர்கள் அதிருப்தி
மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி, 

2021-ம் ஆண்டின் மருத்துவ மேற்படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவேற்றும் பணி நேற்று மாலை தொடங்கியது. 

அடுத்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை விண்ணப்பங்களை பதிவேற்றலாம். 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். புகைப்படம் மற்றும் கையெழுத்து தொடர்பான இறுதி திருத்தங்களை ஏப்ரல் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மேற்கொள்ளலாம். 

இந்த தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் ஏப்ரல் 12-ந் தேதி வினியோகிக்கப்படும். தேர்வுக்கான முடிவுகள் மே 31-ந் தேதி வெளியாகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான கட்டணம் கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளது. 

இதன்படி கடந்த ஆண்டு பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.3,750 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.5,015 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்காக ரூ.765 பிடித்தம் செய்யப்படுகிறது. இதைப்போல எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான ஜி.எஸ்.டி. ரூ.585 ஆகும். தேர்வு கட்டண உயர்வால் மாணவ-மாணவிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நீட் தேர்விற்கு ஏற்கனவே தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், தேர்வுக்கான நுழைவு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - ராசிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராசிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
2. கொரோனா பாதிப்பால் நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு - தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
கொரோனா பாதித்தவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு மண்டலத்தில் இருந்து நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு நாளை மறு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
3. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
4. நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்
நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
5. உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால ‘என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்- வியாசர்பாடி மாணவி குற்றச்சாட்டு
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.