உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதல்; 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழப்பு + "||" + Oil truck collision with car in UP; 7 people including 2 women were killed
உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதல்; 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் யமுனா விரைவுசாலையில் பயணித்த கார் ஒன்றும், எண்ணெய் லாரி ஒன்றும் திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.