உலக செய்திகள்

உக்ரைனில் அதிபர் அலுவலகம் அருகே மோதல்; காவல் அதிகாரிகள் 27 பேர் காயம் + "||" + Conflict near the Chancellor's Office in Ukraine; Police officers injured 27 people

உக்ரைனில் அதிபர் அலுவலகம் அருகே மோதல்; காவல் அதிகாரிகள் 27 பேர் காயம்

உக்ரைனில் அதிபர் அலுவலகம் அருகே மோதல்; காவல் அதிகாரிகள் 27 பேர் காயம்
உக்ரைன் நாட்டில் அதிபர் அலுவலகம் அருகே நடந்த மோதலில் காவல் அதிகாரிகள் 27 பேர் காயமடைந்தனர்.
கீவ்,

உக்ரைன் நாட்டில் வலது பிரிவு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் முன்னாள் தலைவராக இருந்தவர் செர்ஹி ஸ்டெர்னென்கோ.  இந்த அமைப்பு ரஷ்யாவால் தடை செய்யப்பட்டு உள்ளது.  ஸ்டெர்னென்கோ ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்பதற்காக அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் அதிபர் அலுவலகம் அருகே நேற்று ஸ்டெர்னென்கோவின் ஆதரவாளர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.  தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில், தேசிய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் என 27 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இருதரப்பினரிடையே மோதல்; பெண் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 8 பேர் படுகாயம்
வாலிகண்டபுரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. ஆந்திர பிரதேசத்தில் 2 கட்சி தொண்டர்களிடையே மோதல்; 16 பேர் காயம்
ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்தனர்.
3. உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதல்; 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
4. வழிப்பறி கொள்ளையர்களால் விபத்து பஸ்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்
வழிப்பறி கொள்ளையர்களால் விபத்து பஸ்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்.
5. மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து லாரி-கார் மோதல்; 5 பேர் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த பரிதாபம்
மதுராந்தகம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியானார்கள்.