உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 11.26 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.82 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் இன்னும் குறையவில்லை.   

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,26,36,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,82,23,614 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 95 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,17,222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,192 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,88,96,669, உயிரிழப்பு -  5,14,958, குணமடைந்தோர் - 1,92,12,300
இந்தியா   -   பாதிப்பு- 1,10,29,326, உயிரிழப்பு -  1,56,598, குணமடைந்தோர் -  1,07,24,144
பிரேசில்   -   பாதிப்பு -1,02,60,621, உயிரிழப்பு -  2,48,646, குணமடைந்தோர் -   92,15,164
ரஷ்யா    -   பாதிப்பு - 41,89,153, உயிரிழப்பு -    84,047, குணமடைந்தோர் -   37,39,344
இங்கிலாந்து - பாதிப்பு - 41,34,639, உயிரிழப்பு -   1,21,305, குணமடைந்தோர் -   26,06,999

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்    - 36,29,891
ஸ்பெயின்   - 31,61,432
இத்தாலி    - 28,32,162
துருக்கி     - 26,55,633
ஜெர்மனி    - 24,05,263
கொலம்பியா - 22,33,589
அர்ஜெண்டினா- 20,77,228
மெக்சிக்கோ  - 20,43,632
போலந்து    - 16,48,962
ஈரான்       - 15,90,605


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 51 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 51 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிய வகை வைரசும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவுரங்காபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
2. ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.77 கோடியாக உயர்ந்துள்ளது.
4. மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா
மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி இவர் ஆவார்.
5. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.