மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Today petrol and diesel price situation in Chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. 

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90-க்கும் டீசல் சிலை லிட்டர் ரூ.86.31-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - டிடிவி தினகரன்
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2. நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு
நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
3. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்; மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
5. எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.