மாநில செய்திகள்

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள் + "||" + Edappadi Palanisamy and Open Water Selvam wear evening attire for Jayalalithaa statue

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான 24-ந்தேதி (இன்று), சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் கடவுள் வேடம் அணிந்து வந்த கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கடவுள் வேடம் அணிந்து வந்த கலைஞர்கள் கோரிக்கை விடுத்்தனர்.
2. நீலகிரி கலெக்டரை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
3. ஆர்.எஸ். பாரதியின் மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
ஆர்.எஸ். பாரதியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
4. வன்கொடுமை வழக்கு: ஆர்.எஸ்.பாரதியின் மேல்முறையீ்ட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு: அரசு பெண் ஊழியர் பணி நீக்கம்
ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததால் வேளாண்மைத்துறை பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.