மாநில செய்திகள்

இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி: எழும்பூர்-நெல்லை, கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம் + "||" + Double track construction: Change in Egmore-Nellai, Coimbatore-Nagercoil rail service

இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி: எழும்பூர்-நெல்லை, கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி: எழும்பூர்-நெல்லை, கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் எழும்பூர்-நெல்லை, கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கங்கைகொண்டான்-நெல்லை, கோவில்பட்டி-கடம்பூர், மதுரை-நெல்லை இடையே இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை எழும்பூர்-நெல்லை (வண்டி எண்:02631) மற்றும் நெல்லை-எழும்பூர் (02632) சிறப்பு ரெயில்கள் மதுரை-நெல்லை இடையிலும், நாகர்கோவில்-கோவை (06321) மற்றும் கோவை-நாகர்கோவில் (06322) சிறப்பு ரெயில்கள் நாகர்கோவில்-மதுரை இடையிலும், கே.எஸ்.ஆர் பெங்களூரு-நாகர்கோவில் (07235) மற்றும் நாகர்கோவில்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (07236) சிறப்பு ரெயில்கள் விருதுநகர்-நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்-கோவை (02667) மற்றும் கோவை-நாகர்கோவில் (02668) சிறப்பு ரெயில்கள் மதுரை-நாகர்கோவில் இடையிலும், தூத்துக்குடி-மைசூரு (06235) மற்றும் மைசூரு-தூத்துக்குடி (06236) சிறப்பு ரெயில்கள் மதுரை-தூத்துக்குடி இடையிலும் வருகிற 28-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி-திருவனந்தபுரம் (வண்டி எண்:02627), திருவனந்தபுரம்-திருச்சி (02628) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் வருகிற 28-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாதர்-நெல்லை (06071) சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி வரை விருதுநகர்-நெல்லை இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று (24-ந்தேதி), 25, 26 மற்றும் 28-ந்தேதிகளில் விருதுநகர், தென்காசி, நெல்லை வழியாக இயக்கப்படும். சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி வழித்தடங்களில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.