மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை + "||" + In Tamil Nadu, 14,043 people have been vaccinated against corona in a single day - Health Department

தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, 

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் 36-வது நாளாக 749 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 43 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 13 ஆயிரத்து 705 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 338 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 332 பேர் முதல்முறையாகவும், 4 ஆயிரத்து 711 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 114 பேருக்கு முதல்முறையாகவும், 45 ஆயிரத்து 594 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்
அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2. புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம்
முஸ்லிம்களுக்கு புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்பவர்கள், கொரோனா தடுப்புக்கான 2-வது ஊசியும் செலுத்தி கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. ஏப்ரல் 18: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.