உலக செய்திகள்

எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு + "||" + US welcomes ceasefire on LOC between India and Pakistan

எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு

எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு
ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன், 

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003 ஆம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதனை மீறி தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்ததால், இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த சூழலில் சண்டை நிறுத்தத்தை உறுதியுடன் கடைபிடிக்க இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் தொலைபேசி வழியாக நடத்திய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

அதில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் தற்போதை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ள இருதரப்பு முக்கியப் பிரச்சனைகளை தீர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதி மொயீத் யூசுப் ஆகியோர் எல்லைகளில் அமைதியை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் வாயிலாகவே, இந்த சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானுடன் வழக்கமான நல்லுறவை பின்பற்ற இந்தியா விரும்புகிறது என்றும் இரு தரப்புக்கும் இடையிலான பிரச்னைகளை அமைதியான வழியில் பேசித் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க இந்தியா- பாகிஸ்தான் உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சண்டை நிறுத்தத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன என்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. 

இது தெற்காசியாவில் அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான ஒரு நிலையாகும். இது எங்கள் பொதுவான நலனுக்காகவும், இந்த முன்னேற்றத்தை வளர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
3. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லைஎன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்து உள்ளார்.
4. 80 நாடுகளுக்கு அனுப்பி இருக்கிறோம்; கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை; மத்திய அரசு விளக்கம்
இந்தியாவிடம் நேபாளம் கூடுதலாக 50 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. ஒரே நாளில் எகிறியது, கொரோனா தொற்று; 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எகிறியது. 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.