தேசிய செய்திகள்

சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு + "||" + PM Narendra Modi inaugurates The India Toy Fair 2021

சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,

இந்தியாவில் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப்பொருட்களான பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், இந்திய பொம்மைகளின் உலகளாவிய சந்தையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் ‘இந்திய பொம்மை கண்காட்சி 2021’ இன்று தொடங்கப்பட்டது. இன்று முதல் மார்ச் 2-ம் தேதி வரை இக்கண்காட்சி

நடைபெறுகிறது.

இந்நிலையில், இக்கண்காட்சியை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

துவக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியர்களின் வாழ்க்கைமுறையில் அங்கமாக உள்ள மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை நமது பொம்மைகள் பிரதிபளிக்கின்றன.

பெரும்பாலான இந்திய பொம்மைகள் இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இளைக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. அதற்கு பயன்படுத்தப்படும் நிறங்களும் இயற்கையான மற்றும் பாதுகாப்பானது.

சுற்றுச்சூழலுக்கும், உளவியலுக்கும் நன்மையளிக்கூடிய பொம்மைகளை உருவாக்க வேண்டும் என பொம்மை தயாரிப்பாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மறுசுழற்றிக்கு பயன்படும் வகையிலான மற்றும் குறைந்த அளவிலான பிளாஸ்டிக்கை பொம்மை தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை எடுப்பீர்களா?' என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - கவர்னர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி தகவல்
நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக கவர்னர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.
2. அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
3. திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. நவராத்திரி, யுகாதி பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நவராத்திரி, யுகாதி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
5. ஆடுகளத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் சொல்லி விட்டனர் மம்தா பானர்ஜி ‘கிளீன் போல்டு’ ஆகிவிட்டார் - பிரதமர் மோடி வர்ணனை
மேற்கு வங்காள தேர்தலில் மம்தா பானர்ஜி ‘கிளீன் போல்டு’ ஆகிவிட்டார். அவரை களத்தை விட்டு வெளியேறுமாறு மக்கள் சொல்லி விட்டனர் என்று பிரதமர் மோடி கூறினார்.