மாநில செய்திகள்

சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதல்வர் திட்டம் + "||" + Chief Minister and Deputy Chief Minister plan to meet Amit Shah who is coming to Chennai

சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதல்வர் திட்டம்

சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதல்வர் திட்டம்
இன்று சென்னைக்கு வரும் அமித்ஷாவை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. டெல்லியில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு சென்னை வர உள்ளதாகவும், காரைக்கால் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு இன்று வருகை தரும் மத்திய மந்திரி அமித்ஷாவை தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெறும் எனவும், அதிமுக-பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன? கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை
கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன? என்று சிக்கிய கார் டிரைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. மீன்பிடி தடைகாலம் எதிரொலி; சென்னையில் மீன்கள் விலை அதிகரிப்பு; விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை
மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக சென்னையில் மீன்கள் விலை ஓரளவு உயர்ந்து வருகிறது. அதேவேளை விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
4. சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் திருட்டு சட்டசபை செயலகத்தில் புகார்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் வீடு புகுந்து திருட்டு நடைபெற்றுள்ளதாக சட்டசபை செயலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5. ஒரு நாளைக்கு 13 முதல் 15 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்- சென்னை போலீஸ் கமிஷனர்
ஒரு நாளைக்கு 13 முதல் 15 போலீசார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.