தேசிய செய்திகள்

மராட்டியத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது + "||" + Maharashtra reported 8,623 new COVID-19 cases, 3,648 recoveries, and 51 deaths in the last 24 hours, as per State Health Department

மராட்டியத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது

மராட்டியத்தில் தொடர்ந்து 4-வது நாளாக  கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் 4-வது நாளாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மும்பையிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் பல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று  4-வது நாளாக தொற்று பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக மாநிலத்தில் 8 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டனர். 

மாநிலத்தில் இதுவரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 777-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 லட்சத்து 20 ஆயிரத்து 951-பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 72 ஆயிரத்து 530-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 51 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகியதால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 92 ஆக உயர்ந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
2. நன்றி பாராட்டும் நடைமன்னன்
உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று தனது பரவலை தொடங்கி, ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது. அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இரண்டாவது அலையும் வீச தொடங்கி இருப்பதால் பலரும் பீதியில் இருக்கிறார்கள்.
3. கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து
கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
4. மேலும் 9 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.